செய்திகள் :

ஜே.கே. லட்சுமி சிமென்ட் 4-வது காலாண்டு லாபம் 19% அதிகரிப்பு!

post image

புதுதில்லி: ஜே.கே. லட்சுமி சிமென்ட் மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.193.17 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜே.கே. அமைப்பின் முதன்மை நிறுவனமான ஜே.கே. லட்சுமி சிமென்ட் லிமிடெட் நிறுவனமானது தனது ஒழுங்குமுறை தாக்கலில், ஒரு வருடம் முன்பு ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.162.06 கோடி லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மார்ச் காலாண்டில் அதன் செயல்பாடுகளிலிருந்து வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 6.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,897.62 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

காலாண்டில் மொத்த செலவு ரூ.1,667.44 கோடியாக இருந்த நிலையில், இது ஆண்டுக்கு ஆண்டு 7.10 சதவிகிதம் அதிகமாகும். அதே வேளையில், காலாண்டில் விற்பனை அளவு 10.3 சதவிகிதம் குறைந்து 35.98 லட்சம் டன்னாக உள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், மற்ற வருமானம் உள்பட மொத்த வருமானமும் 5.88 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,913.55 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

இருப்பினும், நிதியாண்டு 2025-ல், நிறுவனத்தின் நிகர லாபம் 38.1 சதவிகிதம் குறைந்து ரூ.301.99 கோடியாக இருந்தது. அதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.487.87 கோடியாக இருந்தது. அதே வேளையில் நிறுனத்தின் மொத்த வருமானம் 9 சதவிகிதம் குறைந்து ரூ.6,239.05 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.85.37 ஆக முடிவு!

செயில் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 11 சதவிகிதம் உயர்வு!

புது தில்லி: அரசு பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் - (செயில்), மார்ச் உடன் உள்ள காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்து ரூ.1,250.98 க... மேலும் பார்க்க

டிவிட்டருக்குச் சென்றவரை ரூ. 853 கோடி கொடுத்து வேலையில் தக்கவைத்துக்கொண்ட கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் பணியில் இருந்து டிவிட்டருக்கு (எக்ஸ்) மாற முயன்றவரை ரூ. 853 கோடி கொடுத்து (100 மில்லியன் டாலர்) வேலையில் தக்கவைத்துள்ளது கூகுள் நிறுவனம். இவ்வளவு தொகையைக் கொடுத்து வேலையில் தக்க வை... மேலும் பார்க்க

பாட்டா இந்தியாவின் 4-வது காலாண்டு லாபம் 36% சரிவு!

புதுதில்லி: காலணி உற்பத்தி நிறுவனமான பாட்டா இந்தியா தனது இயக்க லாபம் 36 சதவிகிதம் குறைந்து ரூ.37 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.2023-24 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனமானத... மேலும் பார்க்க

கிரானுல்ஸ் இந்தியாவின் 4-வது காலாண்டு நிகர லாபம் 17% ஆக உயர்வு!

புது தில்லி: மருந்து நிறுவனமான கிரானுல்ஸ் இந்தியா, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 17% அதிகரித்து ரூ.152 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.ஹைதர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று சமமாக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு காரணமாக இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சமமாக முடிந்தது.ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி எ... மேலும் பார்க்க

மிகவும் தட்டையாக வெளியாகும் ஐபோன் 17! இந்தியாவில் விலை எவ்வளவு?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளன. இதையொட்டி ஐபோன் 17 வரிசையில் உள்ள ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார... மேலும் பார்க்க