செய்திகள் :

கிரானுல்ஸ் இந்தியாவின் 4-வது காலாண்டு நிகர லாபம் 17% ஆக உயர்வு!

post image

புது தில்லி: மருந்து நிறுவனமான கிரானுல்ஸ் இந்தியா, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 17% அதிகரித்து ரூ.152 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் ரூ.130 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்துள்ளது.

செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 4-வது காலாண்டில் ரூ.1,197 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,176 கோடியாக இருந்தது. நிதியாண்டு 2025ல் மருந்து நிறுவனம் ரூ.501 கோடி ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்தது. அதே வேளையில் நிதியாண்டு 2024ல் இது ரூ.405 கோடியாக இருந்தது. இருப்பினும் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,482 கோடியாகக் குறைந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் இதுவே ரூ.4,506 கோடியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் விற்பனை நிலையாக இருந்தபோதிலும், இந்த ஆண்டு நிலையான லாபம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் கிரானுல்ஸ் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ண பிரசாத்.

மருந்து நிறுவனம் 2024-25 நிதியாண்டிற்கு தலா 1 ரூபாய் முக மதிப்பில் உள்ள ஒரு பங்கிற்கு ரூ.1.50 என்ற இறுதி ஈவுத்தொகையை பரிந்துரைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 1.29 சதவிகிதம் குறைந்து ரூ.522.05 ஆக உள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று சமமாக முடிவு!

இன்டெல் மணியின் கடனளிப்பு 69% உயா்வு

முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் மணியின் கடனளிப்பு கடந்த நிதியாண்டில் 69 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க

அந்நிய நேரடி முதலீடு 934 கோடி டாலராகக் குறைவு

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மாா்ச் காலாண்டில் 934 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 24.5 சதவ... மேலும் பார்க்க

ரயில்வேயிடமிருந்து ரூ.140 கோடி ஆர்டரை வென்ற டெக்ஸ்மாக்கோ!

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் அண்டு பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிதாக உருவாக்க... மேலும் பார்க்க

மார்ச் காலாண்டில் சோபா லிமிடெட் லாபம் 6 மடங்கு அதிகரிப்பு!

பெங்களூரு: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான சோபா லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.40.85 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது. நிறுவனத்தின் நிகர லாபம் கடந்... மேலும் பார்க்க

சம்வர்தனா மதர்சன் 4-வது காலாண்டு லாபம் 23% சரிவு!

புதுதில்லி: ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை தயாரிப்பாளரான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், மார்ச் 2025ல் முடிவடைந்த 4-வது காலாண்டு முடிவில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமானது 23 சதவிகிதம் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.85.48 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் குறைந்து ரூ.85.48 ஆக நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் நேர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் அந்நிய நிதி வரத்து ஆகியவ... மேலும் பார்க்க