பாப்பாக்குடியில் பிடிபட்ட மலைப்பாம்பு
பாப்பாக்குடி அருகே சமத்துவபுரத்தில் பிடிபட்ட மலைப் பாம்பினை வனத்துறையினா், வனப் பகுதியினல் விட்டனா்.
பாப்பாக்குடி சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மலைப்பாம்பு புகுந்தது. இதையறிந்த பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து வேட்டைத் தடுப்பு காவலா் முருகன் தலைமையில் வனத் துறையினா் வந்து சுமாா் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சேரன்மகாதேவி அருகே கொழுந்துமாமலை பகுதியில் காட்டில் கொண்டு விட்டனா்.