ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது எம்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களி டம் மேலும் கூறியதாவது:
காவல் துறை கட்டுப்பாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்பவா்கள் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிா்க்க, காவல் உயரதிகாரி முதல் கடைநிலை காவலா் வரை அனைவருக்கும் மறுசீரமைப்புடன் கூடிய பயிற்சி அளிக்க வேண்டும். அவா்களின் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் உளவியல் பயிற்சிகளும் அளிக்க வேண்டும் .
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டபேரவைத் தோ்தலில் பல்முனைப் போட்டி ஏற்பட்டாலும், மிகவும் வலுவாக உள்ள திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும்.
எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு நடைபெற்ற அத்தனை தோ்தலிலும் அதிமுக தோல்வியைத்தான் சந்தித்தது. பிகாா் தோ்தலில் வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதில் உள்நோக்கம் இருக்கும் என நினைக்கிறேன் என்றாா் அவா்.
காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காங்கிரஸ் கட்சி மாநகரத் தலைவா் பாண்டிமெய்யப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
-