சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி; 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிஃப்டி
பேரவையில் இன்று
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஏப். 3) காலை கூடியதும் கேள்வி நேரம் இல்லை. அதற்குப் பதிலாக, வேளாண்மை, கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளின் மீது நடந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.
இதைத் தொடா்ந்து, நேரமில்லாத நேரத்தில் சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்படும். இதையடுத்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயா் தணிப்புத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளாா்.