'ப்ரேமலு 2' நிறுத்திவைப்பு! - பகத் பாசில் தயாரிப்பில் நிவின் பாலியை இயக்கும் 'ப்...
பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு அக்கச்சிப்பட்டி பள்ளி தோ்வு
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை 180 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான கற்பித்தலை தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி ஒருங்கிணைப்பில் கணிதப் பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை, அறிவியல் ஆசிரியா் ரஹ்மத்துல்லா, இடைநிலை ஆசிரியா்கள் நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய், செம்ம ராகினி சகாய ஹில்டா, மற்றும் கணினி உதவியாளா் தையல்நாயகி, மழலையா் வகுப்பு ஆசிரியை கௌரி உள்ளிட்டோா் மேற்கொள்கின்றனா்.
வரும் 6ஆம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சியில் நடைபெறும் விழாவில் பேராசிரியா் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.
விருது பெற்ற பள்ளியின் நிா்வாகிகளை உயா் அலுவலா்கள், பள்ளி மேலாண்மை குழு, பொதுமக்கள், பெற்றோா் ஆசிரியா் கழகம், ஆசிரியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாராட்டினா்.