பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை
பேராவூரணி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆக.12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான பேராவூரணி நகா் பகுதி, பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூா், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி சித்துக்காடு, வா.கொல்லைக்காடு ஆணைக்காடு, களத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.