சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில் சனிக்கிழமை அதிகாலை காலமானாா்.
இவரது இளைய மகன் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழி துறைத் தலைவரும், பாரதியியல் ஆய்வாளருமான பேராசிரியா் ய.மணிகண்டன் ஆவாா். சரஸ்வதி அம்மாளின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் குமாரபாளையம் ரோட்டரி மின் மயானத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு: 98408 66278, 98420 20662.