பேருந்து ஓட்டுநா் தற்கொலை!
சேடபட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் பிச்சையா பாண்டி (42). இவா் சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இவருக்கு வலது கையில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில், சில மாதங்களாக மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக மருத்துவ விடுப்பு பெற்று உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சேடபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.