பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்
மதுராந்தகம் அருகே சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து சாலையோர பள்ளத்ததில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயம் அடைந்தாா்.
நாகா்கோயிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து மதுராந்தகம் வழியாக வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தது. படாளம் அருகே கள்ளபிரான்புரம் சாலையில் வந்தபோது, முன்னால் சென்ற சரக்கு லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த விரைவு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.
இது குறித்து அறிந்த மதுராந்தகம் காவல் துறையினா் பலத்த காயம் அடைந்த ஓட்டுநரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மதுராந்தகம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.