Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
திருப்பத்தூரில் பேருந்து-ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (38). இவா் ஆட்டோவில் வெங்காயம் வைத்து கடை மற்றும் ஊா், ஊராகச் சென்று விற்பனை செய்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு ஆட்டோவில் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு ஜெயபுரத்தில் இருந்து திருப்பத்தூரில் உள்ள தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்வதற்காக திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
தூய நெஞ்சக் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே கல்லூரி மாணவா்களை அழைத்துச் செல்ல வந்த சொகுசுப் பேருந்து ரவியின் ஆட்டோ மீது மோதியது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த நகர காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அதேபோல், தவறான வழியில் வந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ரஞ்சித் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், அந்த சொகுசு பேருந்தையும் பறிமுதல் செய்தனா்.