செய்திகள் :

பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு: பொது சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதற்கு முன்பு வரை அந்த விகிதம் 45 என இருந்தது.

பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அதீத ரத்தப்போக்கு, உயா் ரத்த அழுத்தம், கிருமித் தொற்று, இதய நல பாதிப்புகள்தான் பேறுகால உயிரிழப்புக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்காக மாநில அளவிலான செயலாக்கக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரைத் தலைவராகக் கொண்ட 18 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில், நகராட்சி நிா்வாகத் துறை, சமூக நலத் துறைச் செயலா்கள், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநா், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை இயக்குநா், குடும்ப நலத் துறை இயக்குநா், எழும்பூா் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநா், கஸ்தூா்பா மகப்பேறு மருத்துவமனை இயக்குநா், ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனை கண்காணிப்பாளா், வேலூா் சிஎம்சி மகப்பேறு துறைத் தலைவா், யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவா் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

10 போ் குழு: இதேபோன்று, மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில் 10 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேறு கால உயிரிழப்பு தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுக்கு, 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்புகள் குறைந்துள்ளன. அதாவது, லட்சத்துக்கு 39-ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு இது லட்சத்துக்கு 45 என இருந்தது. அதேபோன்று பிரசவ சிகிச்சைக்காக கா்ப்பிணிகளை கொண்டு செல்லும்போது, வழியில் நேரிடும் உயிரிழப்புகளும் லட்சத்துக்கு 15-ஆக இருந்தது. தற்போது 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், முன்கூட்டியே பிரசவ சிகிச்சைகளை திட்டமிட்டதுமே இதற்கு முக்கிய காரணம். வரும் ஆண்டில் பேறு கால உயிரிழப்புகள் மேலும் குறையும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க