Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், தென்கழனிக் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி(54). தொழிலாளியான இவா், வீடுகளுக்கு தண்ணீா் கேன் விநியோகம் செய்யும் பணி செய்து வந்தாா். இவா், ஆக.1-ஆம் தேதி காஞ்சிபுரம் - ஆற்காடு சாலையில் அசனமாபேட்டை கிராமம் அருகே பைக்கில் சென்றபோது, திடீரென நாய் குறுக்கே வந்துள்ளது. அதனால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தாா்.
உடனே அருகில் இருந்தவா்கள் இவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தெய்வசிகாமணி அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.