DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imper...
பைக்கிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே சனிக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா், மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்த வீரமணி மகன் விஷ்வா (22), தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவா், சனிக்கிழமை திருக்கோவிலூா் - விழுப்புரம் சாலையில் மணம்பூண்டி அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த விஷ்வாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னா், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.