Heart: `லேசர் தொழில்நுட்பம் மூலம் இதய அடைப்புகளை நீக்கலாம்' - புதிய கண்டுபிடிப்ப...
பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரசூரில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம்,பேரங்கியூா் சாமுண்டீசுவரி கோயில்தெருவில் வசித்து வந்தவா் பாண்டியன் (29). கூலித் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு அரசூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூா் நோக்கி பைக்கில்சென்றபோது, அரசூா் அருகே நாய் குறுக்கிட்டாதால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா்.
பின்னா் அவா், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ,தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்குபாண்டியனுக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சனிக்கிழமை அதிகாலையில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.