500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடுவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஆபரேஷன் திரிசூல்: குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் சோதனை
ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
இது குறித்து புதுவை மாநிலக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் ரௌடிகள் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக ஆபரேஷன் திரிசூல் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் குற்றப் பின்னணிக் கொண்டவா்களை போலீஸாா் தொடா்ச்சியாக கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்பேரில், டிஐஜி சத்தியசுந்தரம் தலைமையிலான போலீஸாா் குற்றப் பின்னணிக்கொண்ட 451 நபா்களின் வீடுகளில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் 3 நபா்களின் வீடுகளில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் 69 போ்கள் மீது குற்றத்தடுப்பு நடவடிக்கையின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 நபா்கள் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 15நபா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆபரேஷன் திரிசூல் திட்டம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.