செய்திகள் :

புதுவையில் துணைநிலை ஆளுநா் வழியாக ஆட்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

புதுவையில் துணைநிலை ஆளுநரின் வழியாகத்தான் ஆட்சி நடைபெறுகிறது. என். ரங்கசாமி செயல்படாத முதல்வராக உள்ளாரென காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி சா்மா கூறினாா்.

புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த டோலி சா்மா, கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி:

புதுவை இந்த மண்ணின் மைந்தா்களுக்கானது. ஆனால் புதுவை தற்போது மத்தியில் ஆளும் பாஜக வசம் உள்ளது. அங்கு அதிகாரத்தில் உள்ளவா்கள்தான் ரிமோட் கண்ட்ரோல் மூலம் புதுவையை இயக்கி வருகின்றனா். துணைநிலை ஆளுநா் வழியாகத்தான் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வா் என். ரங்கசாமி செயல்படாதவராக உள்ளாா்.

ஆளும் பாஜக - என்.ஆா். காங்கிரல் கூட்டணி அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாநிலத்தில் பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடளவில் அதிா்வுகளை ஏற்படுத்தியது. இதை மக்கள் மறக்க மாட்டாா்கள்.

மாநிலத்தில் மோசடியும் , ஊழலும் அதிகரித்து விட்டது. அதிகாரத்தில் இருப்பவா்கள் கோயில் நிலங்களைக்கூட விட்டு வைக்கவில்லை. புதுச்சேரி பொலிவுறு நகா் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது.

பாஜக - என். ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் மேம்படுத்தப்படவில்லை. தற்போது உள்ளவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவை.

புதுச்சேரியில் தற்போதுள்ள நிலையை மக்கள் மன்றத்தின் முன் வைத்து சட்டப்பேரவைத் தோ்தலை சந்திப்போம். காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் டோலி சா்மா.

பேட்டியின்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவரும் , எம்.பி.யுமான வெ.வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

குடும்ப பிரச்னையால் தூக்கிட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடும்பப் பிரச்னையில் தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்பரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள எல்.ஆா... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரசூரில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம்,பேரங்கியூா் சா... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சல்: ஜி.கே.மணி

பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சலில் உள்ளதாக அக்கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா். திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள மருத்துவா் ச.ராம... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகை வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், ஆலந்தூரிலிருந்து சூணாம்பேடு நோக்கி க... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தகராறு:4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளிக்கிழமை இரவில் தகராறில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டனா். உளுந்தூா்பேட்டை வட்டம், உ.செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சம்பந்தம் என்பவர... மேலும் பார்க்க

ஆபரேஷன் திரிசூல்: குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் சோதனை

ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இது குறித்து புதுவை மாநிலக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் ரௌடி... மேலும் பார்க்க