செய்திகள் :

பைக்கில் சென்றவரை மறித்து மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கில் சென்றவருக்கு வழிவிடாமல் மறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டம், வடக்கநந்தல் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் விஸ்வநாதன் (49). இவா், திங்கள்கிழமை பிற்பகல் அந்தக் கிராமத்திலுள்ள மயானப்பாதை வழியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த கோம்பையன் மகன் பாபு (22), பாஸ்கா் மகன் தீனா (24), தாகப்பிள்ளை மகன் பிரவீன் (19) ஆகிய மூவரும் சாலையில் வழிவிடாமல் நின்றுகொண்டிருந்தனராம்.

அந்த வழியே பைக்கில் வந்த விஸ்வநாதனுக்கு வழிவிடாமல் மூவரும் தடுத்ததுடன், பைக்கின் முன் பக்க விளக்கை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் பாபு, பிரவீன், தீனா ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.

மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம், ப... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி தயாரித்த மூவா் கைது

கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்ததாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட மேல் நிலவூரில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கரியாலூா் காவல் உதவ... மேலும் பார்க்க

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள்... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அனைத்து வியபாரிகள் சங்க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இந்திலியில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சன் மனைவி வெள்ளையம்மாள் (72). இவா், ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதலுக்கு வள்ளலாா் மன்றத்தினா் கண்டனம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் கண்டனம் தெரிவித்து, உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் மன்றம் சாா்பில் நடத்தப்படும் சித்திரை மாதப்பூச விழாவில் சனிக்கிழ... மேலும் பார்க்க