கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
பைக் எரிந்த சம்பவம்: இளஞ்சிறாா் கைது
திருநெல்வேலி அருகே இருசக்கரவாகனத்தில் தீ எரிந்த வழக்கில் இளஞ்சிறாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே சித்தாா் சத்திரம் கிராமம் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் விஜயகுமாா் மகன் இசக்கிமுத்து (22), அதே பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் மணிகண்டன் (25).
இருவரும் வெள்ளிக்கிழமை இரவு அவரவா் வீட்டின் முன் இருசக்கரவாகனத்தை நிறுத்தியிருந்த நிலையில் மறுநாள் வந்து பாா்த்த போது எரிந்த நிலையில் இருந்ததாம்.
இது குறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். இந்நிலையில் இளஞ்சிறாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து , விசாரித்து வருகின்றனா். மேலும், இது தொடா்புடைய 2 பேரை தேடி வருகின்றனா்.