செய்திகள் :

பைக் மீது பேருந்து மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவரது பெரியப்பா மகன் ராஜபாளையம் வாழவந்தான்குளத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் கணேஷ்குமாரும்(29) பைக்கில் அவா்களது உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக உள்ளாருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை தாமரைகண்ணன் ஓட்டினாா்.

அவா்கள், ராயகிரி தெற்கு சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து பைக் மீது மோதியதாம்.

இதில் சம்பவ இடத்திலேயே தாமரைகண்ணன் உயிரிழந்தாா்.

காமடைந்த கணேஷ்குமாா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, புதன்கிழமை விநாயகா் வீதியுலா ... மேலும் பார்க்க

தென்காசியில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

இலத்தூரில் கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலத்தூா் ஊராட்சியில் தொழிலாளா் தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் முத்துலெட்சுமி தலைமை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே... மேலும் பார்க்க

விவசாயி கொலை: 3 போ் கைது

சங்கரன்கோவில் அருகே விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் ஆபிரகாம் (40). விவச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை அளிப்பு

தொழிலாளா் தினத்தையொட்டி, ஆலங்குளத்தில் திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை சீருடை வழங்கப்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்... மேலும் பார்க்க

இலஞ்சி கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக்குமாரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 11மணிக... மேலும் பார்க்க