தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தொண்டி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாண்டுகுடி வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராசு மகன் நாகநாதன் (41). மின் பழுது நீக்கும் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் திருவாடானையிலிருந்து பாண்டுகுடி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பாண்டுகுடி வடக்கு குடியிருப்பு பகுதியில் சாலையோரமாக குவிக்கப்பட்ட மணல் மேட்டில் மோதி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.