செய்திகள் :

பொங்கல் பண்டிகையால் ராக்கெட்டில் பறந்த விமான டிக்கெட்!

post image

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் நிலையில், விமான டிக்கெட் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, விமான கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், விமான டிக்கெட்டுகளை சொல்லவும் வேண்டுமோ?

ஜனவரி 14ஆம் தேதி செவ்வாயன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஏராளமானோர் வெள்ளிக்கிழமை மாலை முதலே சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கி விட்டனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் நேற்று முதல் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளூர் விமான நிலையங்களும் உள்ளன. இன்று சென்னை - மதுரைக்கு ரூ.17 ஆயிரம் வரையிலும், திருச்சிக்கு ரூ.14 ஆயிரம் வரையிலும் விமான டிக்கெட் வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிக்க.. எல்லையில் அமைதி.. பிரம்மபுத்திராவில் அணை: இதுதான் சீனாவின் தந்திரமோ?

சென்னை - கோவைக்கு ரூ.16 ஆயிரம் ஆகவும், தூத்துக்குடிக்கு ரூ.12 ஆயிரமாகவும், சேலத்துக்கு ரூ.10 ஆயிரமாகவும் விமான டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதில் பெரும் துயரம் என்னவென்றால், ஏற்கனவே சென்னையிலிருந்து சேலம், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கேரளம் செல்லும் விமானங்களில் பயணிப்பதால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களின் டிக்கெட் விலைகளும் உயர்ந்திருப்பதுதான் சோகத்திலும் சோகம்.

மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு ஒரு போதும் கூறவில்லை: அமைச்சர் சிவசங்கர்

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய இரயில்வே அமைச... மேலும் பார்க்க

பொங்கல் முடிந்ததும் பரந்தூர் செல்கிறார் விஜய்

ஜனவரி 3ஆவது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள்... மேலும் பார்க்க

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்ட... மேலும் பார்க்க

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்: ஜன.13-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பொங்கல் விழாவையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஜன.13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில், தை மாதம... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்ணிக்கப் போவதாக கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்: வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரு... மேலும் பார்க்க