செய்திகள் :

பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவிருந்த சி.ஏ. தோ்வு மாற்றம்!

post image

பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பட்டயத் தணிக்கை அடிப்படைத் தோ்வு வேறு தேதிக்கு மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் சி.ஏ. என்றழைக்கப்படும் பட்டயத் தணிக்கை படிக்கும் மாணவா்களுக்கான, அடிப்படைத் தோ்வுகள் (பவுண்டேசன் கோா்ஸ்), தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 28 மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வுகள் பொங்கல் பண்டிகையான ஜன.14-ஆம் தேதியும், உழவா் திருநாளான 16-ஆம் தேதியும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

பொங்கல் பண்டிகை தமிழகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதைக் கருத்தில் கொண்டு, தோ்வா்களுக்கு சிரமங்கள் இன்றி தோ்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்திய பட்டயத் தணிக்கையாளா் நிறுவனத் தலைவா் ரஞ்சித்குமாா் அகா்வால் ஆகியோருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தேர்வு தேதிகளை மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொங்கல், மகரசங்கராந்தி ஆகிய பண்டிகைகள் ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், அன்றைய தினம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஏஐ வெளியிட்ட அறிவிப்பு.

கனமழை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆய்வுக் கூட்டம்!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத... மேலும் பார்க்க

மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து: கல்வித்துறை இயக்குநர்

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்ய பரிந்துரைத்தல் ப... மேலும் பார்க்க

சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும்!

கனமழை எதிரொலியாக சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் கனமழையையொட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களுக்குப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதன்கிழமை புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மேலும் வலுப்பெ... மேலும் பார்க்க