செய்திகள் :

பொங்கல் பண்டிகை: மது விற்பனையில் முதலிடத்தை நழுவவிட்ட மதுரை!

post image

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதும் சராசரியாக ரூ. 150 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், எப்போதும்போல மது விற்பனை சூடு பிடித்தது. இதுகுறித்து மாநில வாணிபக் குழு (டாஸ்மாக்) தெரிவித்ததாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள மது விற்பனை நிலையங்களில் ஜனவரி 13 முதல் 16 வரையிலான பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ. 725.56 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்கப்பட்டன.

கடந்தாண்டு பொங்கல் நாள்களில் ரூ. 678.65 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் ரூ. 46 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சராசரியாக தினசரி விற்பனை சுமார் ரூ. 145 கோடியாகவும், 3 நாள்களில் மட்டும் தினசரி விற்பனையில் 67 சதவிகிதம் உயர்ந்து ரூ. 241.85 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன.

இதையும் படிக்க:வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!

போகிப் பண்டிகையான ஜனவரி 13 ஆம் தேதியில் ரூ. 185.65 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதியில் ரூ. 268.46 கோடிக்கும், ஜனவரி 15-ல் திருவள்ளுவர் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காணும் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமையில் ரூ. 271 கோடிக்கும் மதுபானங்கள் விற்கப்பட்டன.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13 ஆம் தேதியில் இருந்து 4 லட்சம் அட்டைப்பெட்டிகள் பீர் வகைகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுவகை மதுபானங்கள் 8.5 லட்சம் அட்டைப்பெட்டிகளும் விற்கப்பட்டுள்ளன.

ஆனால், மது விற்பனையில் எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மதுரை, இந்தாண்டில் தவற விட்டுவிட்டது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 149.55 கோடி மட்டுமே விற்பனையாகியுள்ளன.

பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ. 179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ. 151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

எப்போதும்போல அனைத்து மாவட்டங்களிலும் மது விற்பனை அதிகரித்த நிலையில், இந்தாண்டில் மதுரை மாவட்டம் மது விற்பனையில் வளர்ச்சியை அளிக்கவில்லை.

திமுக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழகர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு க... மேலும் பார்க்க

பன்னாட்டு புத்தகக் காட்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின்!

பன்னாட்டு புத்தகத் திருவிழா கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல... மேலும் பார்க்க

மதுரை, திருச்சியில் அமையும் டைடல் பூங்கா பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கு... மேலும் பார்க்க

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யு என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு மேல் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ... மேலும் பார்க்க

மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.திமுக சட்டத்துறையின் 3ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை(ஜன.1... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் மனு ஏற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில் 58 வேட்பாளா்கள் 65 மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதா... மேலும் பார்க்க