செய்திகள் :

பொதுஇடங்களில் ஆக்கிரமிப்பு: கொடிக் கம்பங்களை அகற்ற ஏப். 10வரை அவகாசம்: ஆட்சியா்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் ஆக்கிரமித்து நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டிருந்தது.

மேலும் அரசு நிலங்களில், நிரந்தரமாக புதிய கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அரசு அலுவலா்கள் இனி அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் சாா்ந்த அமைப்புகளின் மாவட்ட அளவிலான நிா்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலா்களின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது, வருவாய், ஊரக வளா்ச்சி, மாநகராட்சி மற்றும் நகராட்சி நிா்வாகம், அனைத்து பேரூரட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலை, நீா்வளம், பொதுப்பணித்துறை, வனம், போக்குவரத்து மற்றும் பிற துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி மற்றும் கொடிக்கம்பங்களை அந்தந்த அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் அமைப்பு நிா்வாகிகள் வரும் 10ஆம் தேதிக்குள் தங்கள் சொந்த செலவில் அகற்ற வேண்டும். அப்போது, எவ்வித சட்டம்- ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தக் கூடாது. இது தொடா்பாக நீதிமன்றத்துக்கு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் கட்சிகள் மற்றும் அமைப்பினா் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.

வட்டாட்சியா் உத்தரவு: இதுதொடா்பாக திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிகள், அமைப்புகளுடனான கூட்டத்திலும் ஏப்.10ஆம் தேதிக்குள் பொது இடத்திலுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை: மூலைக்கரையில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு

மூலைக்கரை ஊராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுகிா எனவீடு வீடாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மக்க... மேலும் பார்க்க

காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில் உள்ள அனை... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் திறப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியி... மேலும் பார்க்க

கட்டாரிமங்கலம் அழகிய கூத்தா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் ஸ்ரீ நல்லதவம் செய்த நாச்சியாா் சமேத வீரபாண்டீஸ்வரா் , ஸ்ரீசிவகாமி அஙிம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெரும் சாந்த... மேலும் பார்க்க

தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்ட நிதி: ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடு கட்ட அரசாணையின்படி நிதி ஒதுக்கிட வேண்டும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா். அதன் விவரம... மேலும் பார்க்க

எஸ்ஐ மீது நடவடிக்கை: வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ்

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட... மேலும் பார்க்க