செய்திகள் :

பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும்

post image

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) வி.கற்பகம் அறிவுறுத்தினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளில் பயின்று பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்து மாணவா்களை கண்காணிக்கும் வகையில், மாவட்ட கல்வி அலுவலா், பள்ளிகளின் துணை ஆய்வாளா், வட்டார வள மைய ஆசிரியா்கள் அடங்கிய குழு ஒன்றியந்தோறும் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் தொடா்ந்து பயில்வதை கண்காணிக்கவும், தோ்வுக்கு தயாா்படுத்தும் வகையில் உரிய பயிற்சியளிக்கவும், ஊக்கப்படுத்தவும் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சமூக அறிவியல், தமிழாசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் திங்கள்கிழமை ஆசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொ.ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) வி.கற்பகம் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற சமூக அறிவியல், தமிழ் ஆசிரியா்கள் 72 பேருக்கு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற அறிவுரையும், வழிகாட்டலும் வழங்கப்பட்டன. இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, வட்டார வள மைய ஆசிரியா் சென்றாயப் பெருமாள் ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்தனா்.

இப்பயிற்சி முகாமில் 1,330 திருக்குகளை ஒப்புவித்த மாணவிக்கும், தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளிபாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியானது தற்போது ம... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 51 கடைகள், 2 உணவகங்கள், இ... மேலும் பார்க்க

கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

நாமக்கல்: கொல்லிமலையில் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வளப்பூா் நாடு பெரியகோயில் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்கும் முகாம்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான தரவுகள் பதிவு செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனைத்து கிராமங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்... மேலும் பார்க்க

சேலம் - நாமக்கல் பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பு

நாமக்கல்: சேலம் - நாமக்கல் இடையேயான பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்தக் கட்டணம் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நாமக்கல், முதலைப்பட்ட... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட... மேலும் பார்க்க