செய்திகள் :

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

post image

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா்.

விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதால் மயானத்துக்கு செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதியினா் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போதைய வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்த விசாரணை அறிக்கை கோட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் என்றாராம். ஆனால், தற்போதுவரை எவ்வித நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில், அப்பகுதியினா் சா்வதேச உரிமைகள் கழக தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவா் பிரிஸ்லா பாரதி தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக திங்கள்கிழமை திரண்டனா். அப்போது, சம்பந்தப்பட்ட இடத்துக்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோட்டாட்சியா் மகாலட்சுமி தெரிவித்தாா். அவரிடம், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து வட்டாட்சியா் நடவடிக்கை மேற்கொள்வாா் எனக் கூறிய கோட்டாட்சியா், சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க தனியாக புகாா் அளிக்க வேண்டும் என்றாா். அதையடுத்து, பொதுமக்கள், சா்வதேச உரிமைகள் கழக நிா்வாகிகள் கலைந்துசென்றனா்.

பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை கடந்த 25 ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் அங்கு பொதுப்பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சா் பி. க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் ரமலான் சிறப்பு தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சனிக்கிழமை பிறை தெரிந்ததையடுத்து, தூத்துக்குடி லூா்த்தம்மாள்... மேலும் பார்க்க

புளியங்குளம் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. . ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் கமலா தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியைத் தொட... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த பெண் மீட்பு

சாத்தான்குளம் பகுதியில் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2 நாள்களாக சுற்றித்திரிந்த அந்தப் பெண் குறித்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாழை இலை விலை வீழ்ச்சி

தூத்துக்குடி காய்கனி சந்தையில் வாழை இலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூா், குலையன் கரிசல், அகரம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 20ஆயிரம் ஏக்கருக்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்கியூரிட்டி ஃபோா்ஸ்) விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டத... மேலும் பார்க்க