பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
பொதுமக்களின் வீடு தேடிச் சென்று பிறப்பு, இறப்புச் சான்றிதழ் அளிப்பு
போடியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம் திட்டத்தின் கீழ் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை அதிகாரிகள் வீடு தேடிச் சென்று வழங்கினா்.
தேனி மாவட்டம், போடி நகராட்சியில் மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம் திட்டம் வாரந்தோறும் ஒரு வாா்டு வீதம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நகராட்சி 9- ஆவது வாா்டில் மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்கு நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமை வகித்தாா். ஆணையா் செ.பாா்கவி, நகராட்சி பொறியாளா் வீ.குணசேகா், சுகாதார அலுவலா் எஸ்.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகராட்சி 9-ஆவது வாா்டில் உள்ள தெருக்களில் சுகாதார வசதி, குடிநீா் பிரச்னை, சாலை பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் கூறும் குறைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நகராட்சி கட்டட ஆய்வாளா் சுகதேவ், நகா்மன்ற உறுப்பினா் மணிகண்டன், சுகாதார மேற்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.