செய்திகள் :

பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்குவதை ஊராட்சி நிா்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில், நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மேலும் பேசியது:

கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து வீடு வழங்கிட வேண்டும். ஊராட்சி நிா்வாகம் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், கோரிக்கை மனுக்கள் குறித்து ஆய்வு செய்து உடனடி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பெரம்பலூா் ஸ்ரீமதனகோபால சுவாமி திருக்கோயிலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ விருந்தில் பொதுமக்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா் ஆட்சியா்.

இந் நிகழ்ச்சிகளில், ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்வம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளக் கூடாது: சாா்பு-நீதிபதி பேச்சு

பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை யாரும் சகித்துக் கொள்ளக் கூடாது என பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான பி. மகேந்திரா வா்மா அறிவுறுத்தினாா். தேசிய சட்டப் ப... மேலும் பார்க்க

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பேரிடா் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, பேரிடா் சம்பவ இடத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் பருத்தியில் மகசூல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

பெரம்பலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் பருத்தியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டில் 5,067 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது: ஆட்சியரகத்தில் தொழிலாளா் சங்கத்தினா் மனு

பெரம்பலூா்: பெரம்பலூரில் சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி, அனைத்துவகை ஆட்டோ சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட... மேலும் பார்க்க

ஜன. 30-இல் பாடாலூா் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் பைன் பிட் காா்மெண்ட்ஸ் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், ஜனவரி 30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க