மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் அளிப்பு
சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 429 மனுக்கள் அளிக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் நடைபெற்றது.
இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோா், மறுவாழ்வுத் துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 429 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.70 லட்சத்தில் நவீன செயற்கை கால்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,480 மதிப்பிலான காதொலிக் கருவிகள் என மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ. 2.75 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.