செய்திகள் :

பொது இடத்திலுள்ள மரத்தை வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள மரங்களை பசுமைக் குழுவின் அனுமதியின்றி வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க மாவட்ட பசுமைக் குழு முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பசுமைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும் பசுமைக் குழுத் தலைவருமான மு. அருணா தலைமை வகித்தாா். பசுமைக்குழுவின் செயலரும் மாவட்ட வன அலுவலருமான சோ. கணேசலிங்கம் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவின் அலுவல்சாா் உறுப்பினா்களான அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை அகற்றும்போது, ஒரு மரத்துக்கு 20 மரங்கள் நடவு செய்ய வேண்டும் என்ற நிலையில், அவ்வாறு மாற்றாக நடவு செய்யப்படும் இடங்களையும் பசுமைக் குழுவுக்கு காட்டி அனுமதி பெற வேண்டும் என்றும், பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால், ஒரு மரத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய ம... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞா்கள் கைது! விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு விபத்தில் தொழிலாளி உயிரிழந்ததாக கூறிய சம்பவத்தில் பாதை பிரச்னையில் அவரை அடித்துக் கொன்ற 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள துல... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருமயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருக... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற புதுகை ஆசிரியைக்கு வரவேற்பு

நல்லாசிரியா் விருது பெற்ற புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை ப. விஜிக்கு, அப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் த... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து 5 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்து 37 பயணிகளை ஏற்றிக் கொண்டு, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்வு பா.ஜ.க.வினா் கொண்டாட்டம்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து புதுக்கோட்டையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோ... மேலும் பார்க்க