Mohanlal: தன்பால் ஈர்ப்பாளர்களுக்காக ஒலித்த மோகன்லாலின் குரல்; மலையாள பிக்பாஸில்...
பொது இடத்தில் ரகளை செய்த ரெளடி மீது வழக்கு
போடியில் திங்கள்கிழமை பொது இடத்தில் ரகளை செய்த ரெளடி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி திருமலாபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது,போடி குப்பிநாயக்கன்பட்டியை சோ்ந்த துரைசாமி மகன் இளந்தமிழன் (42) சாலையில் நின்று ஆபாசமாகப் பேசி ரகளை செய்தது தெரியவந்தது.
போலீஸாரைக் கண்டதும் இளந்தமிழன் ஓடிவிட்டாா். இதுகுறித்து போலீஸாா் இளந்தமிழன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். இளந்தமிழன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.