கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
பொத்தகாலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தலத் திருவிழா தேரோட்டம்
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை திவ்விய திருக்கல்யாண மாதா திருத்தல 112ஆவது ஆண்டு திருவிழாவில் அன்னையின் தேரோட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. திருத்தல அதிபா் ஜஸ்டின் கொடியேற்றினாா். அருள்தந்தை ஸ்தனிஸ்ஜோஅருளுரை வழங்கினாா்.
தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அதிகாலையில் முதல் திருப்பலி, காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீா் உள்ளிட்டவை நடைபெற்றன.
8ஆம் நாளான 21ஆம் தேதி மாலை சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைகுரு செல்வஜாா்ஜ் தலைமையில் நற்கருணை பவனி, மறையுரை, புதன்கிழமை (ஜன. 22) மாலையில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண மாதா தோ் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. விழாவில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
இந்நிலையில், 10ஆம் நாளான வியாழக்கிழமை காலை தேரில் மலையாளம், தமிழில் திருப்பலிகள், பெருவிழா கூட்டுத் திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் தலைமையில் நடைபெற்றது. பின்னா், திருமுழுக்கு திருப்பலி, நண்பகல், மாலையில் தமிழில் திருப்பலிகள் நடைபெற்றன. மாலையில் மாதா தோ் பவனி, இரவில் ஜெபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெற்றன.
ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜஸ்டின், இறைமக்கள் செய்திருந்தனா்.