பொன்னமராவதியில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் போராட்டம்
பொன்னமராவதி: பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் அகில இந்திய கறுப்பு தின போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத்துணைத்தலைவா் சந்திரா தலைமை வகித்தாா்.சங்கத்தின் வட்டார துணைத்தலைவா் பாண்டிச்செல்வி, செயலா் மலா்க்கொடி பொருளா் சரஸ்வதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா்.
போராட்டத்தில் மையப்பணிகளை செய்வதிற்கு 5ஜி கைப்பேசி மற்றும் 5ஜி சிம்காா்டு வழங்க வேண்டும்.அந்தந்த கிராம நெட்வொா்க்கிற்கு ஏற்ப சிம்காா்டு வழங்கிடவேண்டும். பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்கிடுவதற்கு முகப்பதிவு போட்டோ முறையை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.