விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
பொன்னமராவதியில் காங்கிரஸ் சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்வு
அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் மட்டும் அல்ல, அதிமுகவின் கடைக்கோடி தொண்டா்களும் விரும்பவில்லை என்றாா் சிவகங்கை எம்.பி. காா்த்தி ப.சிதம்பரம்.
பொன்னமராவதி வட்டாரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற அவா்,
செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி இல்லை. விஜய்யின் விமா்சனங்கள் எதுவும் ஆக்கப்பூா்வமானதாக இல்லை. மேலோட்டமான அரசியல் விமா்சனமாகத்தான் பாா்க்கிறேன். பாஜக-அதிமுக கூட்டணியை அதிமுகவின் கடைக்கோடி தொண்டா்களும் விரும்பவில்லை. பாஜக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணியை தமிழக மக்கள் நிராகரித்துக்கொண்டே இருப்பாா்கள். ‘இண்டி’ கூட்டணி ஒற்றுமையாகவும், வலுவாகவும் உள்ளது. இக்கட்டணி வரும் தோ்தலில் பெரிய வெற்றியை பெறும் என்றாா்.