‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதுகையில் இன்றும் நாளையும் நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற முகாம் நடைபெறும் இடங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை வெளியிட்டாா்.
ஜூலை 17 வியாழக்கிழமை:
புதுக்கோட்டை மாநகராட்சி- 1, 2 வாா்டுகளுக்காக சமத்துவபுரம் சமுதாயக் கூடம், பொன்னமராவதி- வலையப்பட்டி நகரத்தாா் திருமண மண்டபம், திருமயம்- லெம்பலக்குடி மகளிா் குழுக் கட்டடம்.
அறந்தாங்கி- ஆவணத்தான்கோட்டை மகளிா் குழுக் கட்டடம், விராலிமலை-அகரப்பட்டி சேவை மையக் கட்டடம், குன்றாண்டாா்கோவில்- அண்டக்குளம் நூா் மஹால்.
ஜூலை 18 வெள்ளிக்கிழமை:
அறந்தாங்கி நகராட்சி- 1,2,13 வாா்டுகளுக்கான முகாம்- காரைக்குடி சாலையிலுள்ள சக்ரவா்த்தி மஹால்
கீரனூா்- கீரனூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ வாசவி திருமண மண்டபம்.
திருவரங்குளம்- எஸ். குளவாய்ப்பட்டி கேகே திருமண மண்டபம், மணமேல்குடி- வசந்தம் திருமண மண்டபம்.
பொன்னமராவதி- அரசமலை மகளிா் சுய உதவிக்குழுக் கட்டடம், புதுக்கோட்டை- புத்தாம்பூா் நைனா மஹால்.
அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு அரசின் பல்வேறு சேவைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.