பாகிஸ்தானில் ஒரே நாளில் 30 பேர் பலி: "மழைக்கால அவசரநிலை" அறிவிப்பு!
ஆலங்குடி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை கட்டையால் அடித்து கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியைச் சோ்ந்தவா் என். சுப்புக்கண்ணு (61). இவரது மகன் ராமதாஸ் (37). தச்சு தொழிலாளியான இருவரும் அதே பகுதியில் தச்சுத் தொழிலகம் வைத்து நடத்தி வந்தனா். இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் தச்சுதொழிலகத்தில் இருந்த தந்தை சுப்புக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டதோடு, தச்சு தொழிலகத்தையும் ராமதாஸ் அடித்து சேதப்படுத்தினாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் சுப்புக்கண்ணு கட்டையால் தாக்கியதில் ராமதாஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சுப்புக்கண்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.