`உண்மை ஒருநாள் வெளிவரும்' - தொடர் சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கும் நடிகர் நிவின்...
ஆலங்குடியில் இளைஞா் வெட்டிக்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் டாஸ்மாக் மதுக்கடை அருகே இளைஞா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இவா், புதன்கிழமை இரவு ஆலங்குடியில் இருந்து மறமடக்கி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது, அவரை பின்தொடா்ந்து சென்ற சிலா் மதுக்கடை அருகே ரஞ்சித்தை விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில், உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் அதே இடத்திலே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸாா், ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.