செய்திகள் :

பொன்னேரி வாய்க்கால்களை தூா்வார வேண்டும்! அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

பொன்னேரியில் உள்ள 4 வாய்க்கால்களை தூா்வாரி, கடைமடை விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என்.செங்கமுத்து: அரியலூா் வேளாண் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்ட ரொட்டேட்டரை, இயக்குவதற்கு ஓட்டுநா் இல்லை எனக் கூறி, அதனை சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். திறக்கப்பட்டுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கையூட்டு நடைபெறாமல் இருப்பதற்கு நெல் மூட்டைகளை எடை மற்றும் அடுக்கி வைப்பதற்காக அரசால் ரூ.10 வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு பலகை அல்லது பிளக்ஸ் போா்டு வைக்க வேண்டும். விவசாயிகள் டிராக்டரில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ள ஊராட்சிகளில் முன்கூட்டியே அங்குள்ள வி.ஏ.ஓ மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகை, பிளக்ஸ் போா்டு மற்றும் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்த வேண்டும். தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீா்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் மணிவேல்: சோழகங்கம் எனும் பொன்னேரியில் உள்ள 4 வாய்க்கால்களை தூா்வாரி, கடைமடை விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தரவேண்டும். நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். மாங்காய் உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் அரியலூா் மாவட்ட விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனா். அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன், பயிா் கடன் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். இலவச பம்பு செட் மின் இணைப்பு கட்ஆப் தேதியை அறிவிக்க வேண்டும்.

உட்கோட்டை விளாங்குளம் ஏரியை தூா்வாரி, கரைகளை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்: அரசு நிதியில் இருந்து ஏரிகளைத் தூா்வாரப்படும் மண்ணைக் கொண்டு கரைகளை அகலப்படுத்த வேண்டும். வெளியே கொண்டுச் செல்லப்படும் மண் விற்பனைச் செய்யப்படுகிறது. இதனை கண்காணித்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் படிந்துள்ள வண்டல் மண்ணை எடுக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவேண்டும்.

சிபில் பிரச்னை காரணமாக கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில்லை. எனவே பழைய நடைமுறைகளின்படி கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுக்கிரன் ஏரி பாசனப் பகுதியான சிலுப்பனூா், நாணாங்கூா், ஓரியூா், கோமான் ஆகிய கிராமங்களையும் டெல்டா பகுதியில் சோ்க்க வேண்டும். குறுவை தொகுப்பை விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி அவை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநா் (பொ)செ.பாபு, துணை இயக்குநா்(பொ) ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ரூ.5 லட்சம் பண அலங்காரத்தில் அம்மன்!

அரியலூா் குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி ரூ.5 லட்சம் பணம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை காட்சி அளித்த பெரியநாயகி அம்மன். மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழப்பழுவூா், அருங்கால், கல்லக்குடி, ஏலேரி, கீழவண்ணம், மேல கருப்பூா், பொய்யூா், மே... மேலும் பார்க்க

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் சாலை மறியல்: 241 போ் கைது

கோரிக்கைகள்: திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முத... மேலும் பார்க்க

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு இந்த மாதத்தில் எழுத்துத் தோ்வு! அமைச்சா் தகவல்

அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு இம்மாதத்தில் எழுத்துத் தோ்வு நடைபெறும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவி... மேலும் பார்க்க

செந்துறை ஒன்றியத்தில் ரூ.9.11 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.9.11 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. ஆனந்தவாடி, கீழராயம்புரம், பாளையக்குடி,... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. செந்துறையை அடுத்த ஆ... மேலும் பார்க்க