செய்திகள் :

பொம்மைகள் - குறுங்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

அன்னம்மாள் பயணங்களை விரும்புவதில்லை. வயக்காட்டுக்குப் போவாள். மரத்தடிக்குப் போவாள். நல்ல காரியங்களுக்கு டவுனுக்குப் போவாள். அதற்கும், பஸ் ஸ்டாண்ட்டுக்கு அருகிலிருக்கும் மண்டபமா என்று கேட்டுக்கொள்வாள். வேறு மண்டபம் என்றால் போக மாட்டாள்.

பொங்கலுக்குத் துணி எடுக்க பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலிருந்த கடைத்தெருவிற்குப் போயிருக்கிறாள். திரும்பிப் பார்த்துக் கொண்டே நடப்பாள். ஏதோ பஸ் ஸ்டாண்ட் அவளைவிட்டு ஓடிவிடும் என்பதுபோல். 

சித்தரிப்புப் படம்

ஒருநாள் கருத்தாயி தான் மதுரைக்கு வா என்று கூப்பிட்டாள். அன்னம்மா மறுத்தாள். கருத்தாயி அழுததும் அன்னம்மாள் ஒப்புக் கொண்டாள். கருத்தாயிக்கு கழுத்துக் கட்டி ஆப்ரேசன். ஒத்தாசைக்கு ஆள் வேண்டும்.

மருமகள்கள் விலகிக் கொண்டனர். மகன்களுக்கு ஆயிரம் காரணம். கருத்தாயியின் அம்மாவுடைய அண்ணனுடைய கடைசி மகன் மனைவி அன்னம்மாள். ஒரே வயது. சரி போய்த்தானே ஆகவேண்டும் என இருவரும் கிளம்பினர்.

பயணம் போகப் போக அன்னம்மாளுக்கு மனது கனத்தது. இறங்கியதும் ஒரு ஓட்டல்காரன் பிடித்து உக்கார வைத்துச் சாப்பிட வைத்தான். ஆளுக்கு இரண்டு இட்டலி. அந்தக் கடைக்காரன் சொன்ன பாதை வழியாக ஷேர் ஆட்டோவைப் பார்த்தாள் அன்னம்மா. அறுபது ரூபாய் இருக்கா என்று கேட்டதும் ஐநூறு ரூபாயை எடுத்துக் காட்டினாள் கருத்தாயி.

கம்பியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். மிச்சம் நானூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தார் ஆட்டோக்காரர்.

கருத்தாயி எண்ணிப் பார்க்கவில்லை. அவள் ஆப்ரேசன் கத்தியை நினைத்துக் கொண்டிருந்தாள். அன்னம்மா நான்கு நூறு ரூபாய் நோட்டு இருக்கிறது என்று பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டாள். ஒருவேளை ஏமாற்றியிருந்தாலும் மிச்சம் நானூறு இருக்கிறது போதும் என்று நினைத்துக் கொண்டாள்.

சித்தரிப்புப் படம்

"பாட்டி.. ரத்தம் மட்டும் குடுத்துட்டுக் கிளம்பிடு.. நாள மறுநாள் வா.. பெட்ல சேந்துக்கலாம்.." என்று எழுதிக் கொடுத்தார்கள். கருத்தாயி முழித்தாள். அன்னம்மா தெளிவாகப் புரிந்தது போல் கருத்தாயி கையைப் பிடித்துக்கொண்டு வெளியேறினாள்.

அன்னம்மாவிற்கு இதெல்லாம் கொஞ்சம் பிடித்திருந்தது. பயம் தான். இருந்தாலும் இதெல்லாம் முடிகிறதே என்று பெருமைப்பட்டுக் கொண்டாள். இருவரும் கேட்டுக்கேட்டு எல்லாம் முடித்து மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள். 

பேருந்து நிலையத்திற்கு அருகே துணிக்கடைக்கு நடந்து சென்று கருத்தாயிக்கு ஒரு புது துணி எடுத்தார்கள். ஆப்ரேசனுக்குப் பிறகு பழைய துணி போடக் கூடாது என்று முன்பே எடுத்த முடிவு அது. அன்னம்மாவிற்கு அந்தக் கடை விளக்குகள் பிடித்திருந்தது. அவள் குறுகவில்லை. விரிந்தாள்.

வாய்திறந்து சத்தமாகப் பேசினாள். கொஞ்ச நேரம் அந்தக் கடையிலிருந்த பொம்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆள் நிற்பது போல் மாயையைத் தந்தது அவளுக்கு.

டவுனில் சப்பளிந்த முகமும் தோள்பட்டைகளும் மட்டுமே துணிக்கடையில் காணப்படும். இப்படி முழு உருவ முகமற்ற உடல் தத்ரூப பொம்மைகளை அவள் பார்த்ததேயில்லை. 

சித்தரிப்புப் படம்

பேருந்தில் ஏறி அமர்ந்தனர். டிக்கெட் எடுக்கும் போது பேருந்திலிருக்கும் எல்லோருக்கும் கேட்கும்படி கன்டக்டரிடம், "ஐயா எந்த ஊரு..." என்றாள் அன்னம்மாள்.

பேருந்தில் எல்லோரும் பார்க்க, ஆந்திரா என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர். சற்று நேரத்தில் செக்கிங் வந்தார்கள். அன்னம்மாள் கருத்தாயியிடமிருந்து பத்திரமாக வாங்கி வைத்திருந்த டிக்கெட் இப்போது இல்லை. ஆளுக்கு ஐநூறு ரூபா.. அபராதம் கட்டு.. என்றார் செக்கிங்.

"நாங்க எடுத்தோம்யா.. சீட்ட விட்டுட்டோம்.." என்று தரையில் குனிந்து தேடினாள் அன்னம்மாள். டிக்கெட் பேருந்திலிருந்து இறங்கி இரண்டு நிறுத்தங்களுக்கு மேல் ஆகிறது. அருகிலிருப்பவர்களைப் பார்த்தாள்.

ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தனர். ஏய்.. என்ன காணாத மாதிரி இருக்கீக.. எல்லோரும் தான பாத்தீக என்றாள். எந்தப் பதிலும் இல்லை. கண்டெக்டர் தலையிட்டு சுமூகமாகப் பிரச்னையைத் தீர்த்து வைத்தார்.

இருந்தும் அன்னம்மாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுற்றி எல்லோர் முகத்தையும் பார்த்தாள். அவளுக்குத் துணிக்கடை பொம்மைகள் நினைவிற்கு வந்தன. ஓர் உடை மரம் போல எழுந்து நின்றாள். 

சித்தரிப்புப் படம்

"ஏய்.. அம்புட்டா பேதலிச்சுக் கெடக்கு இந்த ஊரு.. உங்கள எல்லாம் யாரும் கேக்குறது இல்ல போல... ஆத்தாடி.. அம்புட்டும் படிச்சுப் பெரியாளப் போயிட்டீகனு நெனச்சுக்கிட்டு இல்ல ஊருக்குள்ளயே கெடந்துட்டேன்.. அம்புட்டும் சின்ன ஆளாவுல போயிட்டீக.. பாத்துக்கிறேன்.. இனி அடிக்கடி வாரேன்.." என்றாள். ஆங்காங்கே ஒரு சில பொம்மைகள் லேசாக அசைந்தன.

- இராஜேஷ் இராமு.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

டீன் ஏஜ், கண்ணாடி முன் நின்றதில் வந்த மாற்றம்... `பல்'லேகா -3 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பே விடுதலை - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை| பகுதி 9

புத்தகக் கடை திறப்பதற்கு மிஷாவ்வின் மனைவி வில்லி ஆன் ஆர்வம் காட்டவில்லை.அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலைக்குப் பின், கறுப்பர்களுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் சூழலில், வாசிப்புப் பழக்கமே இல்லாத... மேலும் பார்க்க

'இதற்காகத்தான் புத்தகக் கடையைத் தொடங்கினேன்...' - லூயிஸ் மிஷாவ் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 8

மிஷாவ் அவர்கள், பேராசிரியர் என்றழைப்பதற்கு மிக மிகப் பொருத்தமானவர் என்பதைக் என் உள்மனம் ஒப்புக்கொண்டது.தான் எப்படி புத்தகக் கடை வைக்கும் முடிவுக்கு வந்தேன் என்பதை, சித்தாந்த பயிலரங்கில் உரையாற்றுவதுபோ... மேலும் பார்க்க

புகை - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி

மத்திய அரசின் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருது சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award). பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் ... மேலும் பார்க்க

`நான் வேற மாதிரி கறுப்பன்' - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 7

‘சூதாட்டத் தொழில் ஈடுபட்டு மனம்திருந்தி திரும்பினாலும், அந்தப் பாவக் கறை எப்போதும் அழியாது’ என்ற குற்றப் பார்வை லூயிஸ் மிஷாவ் மீது படிந்திருந்தது.தேவாலயப் பணிகளில் இருந்து விலக இது காரணமாக இருக்கலாம் ... மேலும் பார்க்க