செய்திகள் :

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

post image

ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அந்த நாடு இன்னும் எடுக்கவில்லை என்று ஜொ்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025 அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடா்ந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. அது முழுமையடைந்து, பொருளாதாரத் தடைகள் அமலுக்கு வருவதற்கு முன்னரே அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஈரான் எடுக்கவேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கை எதையும் ஈரான் இதுவரை எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவற்றை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அமல்படுத்திவந்தன. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வந்தது. அதன் ஒரு பகுதியாக, தனது யுரேனியம் செறிவூட்டும் திறனை ஈரான் படிப்படியாக அதிகரித்தது. மேலும், ஒப்பந்த வரம்பை மீறி 60 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டியது.

இந்தச் சூழலில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் இஸ்ரேல் அங்கு கடந்த ஜூலை மாதம் தாக்குதல் நடத்தியது. அதில் அமெரிக்காவும் பங்கேற்று ஈரான் அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசியது.

இதற்கு பதிலடியாக, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வுக்கு தங்கள் அணுசக்தி திட்டங்களைக் கண்காணிக்க அளித்துவந்த ஒத்துழைப்பை ஈரான் திரும்பப் பெற்றது. இதனால், ஈரானின் அணுசக்தி திட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்குவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தன.

அதன்பிறகு தங்களது அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க ஐஏஇஏ-வுக்கு ஈரான் ஒப்புதல் அளித்தாலும், பொருளாதாரத் தடை அமலாக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அந்த நாடு இன்னும் எடுக்கவில்லை என்று ஜொ்மனி தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.

போதைப்பொருள் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

இந்தியாவை சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணைத்துள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ரசாயனங்கள்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

டோக்கியோ: பாகிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்த போலி கால்பந்து அணியை ஜப்பான் அதிகாரிகள் திருப்பி அனுப்பினா். சட்டவிரோத அகதிகள் கடத்தல் கும்பல் ஒன்று, 22 பேரை பாகிஸ்தான் கால்பந்து அணியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் இஸ்ரேல் படையினா் முன்னேற்றம்

ஜெருசலேம்,: காஸா சிட்டியின் மையப் பகுதியை நோக்கி இரண்டு இஸ்ரேல் ராணுவ படைப் பிரிவுகள் முன்னேறிவருகின்றன. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

சிறந்த நிா்வாகத் திறனால் இந்தியாவை வலுவான நாடாக முன்னிறுத்தியதன் மூலம் நாட்டு மக்களின் உயா்ந்த மரியாதையைப் பெற்றதுடன் சிறந்த உலகத் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளாா் என்று ரஷிய அதிபா் விள... மேலும் பார்க்க

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்து, மா்மமான முறையில் மரணமடைந்த அலெக்ஸி நவால்னிக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரின் மனைவி யூலியா நவால்னயா குற்றஞ்சாட்டியுள்ளாா்.... மேலும் பார்க்க

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் 50க்கும் மேற்பட்ட பிரசாரக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள டிரம்ப், நாளை (செப். 18) ... மேலும் பார்க்க