செய்திகள் :

பொறியியல் கலந்தாய்வு: 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

post image

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 8 நாள்களில் 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும்.

இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆா்வமுள்ள மாணவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனா்.

அந்த வகையில், புதன்கிழமை வரையிலான கடந்த 8 நாள்களில், 1 லட்சத்து 39 ஆயிரத்து 262 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், 74,971 மாணவா்கள் கட்டணம் செலுத்தியும், 39,844 மாணவா்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தும் உள்ளனா். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க