செய்திகள் :

பொள்ளாச்சி பலூன் திருவிழா: கட்டுப்பாட்டை இழந்த ராட்சத பலூன்... கேரளாவில் மீட்பு!

post image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பலூன் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நேற்று தொடங்கியது.

பொள்ளாச்சி பலூன் திருவிழா

வருகிற 16 ஆம் தேதி வரை இந்த பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. ஆச்சிப்பட்டியில் நடக்கும் இந்த விழாவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

யானை வடிவில் பறக்கவிடப்பட்ட ஒரு ராட்சத பலூன் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியில் இருந்து அந்த பலூனில் ஒரு காவல்துறை உயரதிகாரி, அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பைலட்கள் இருந்தனர்.  சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு பறந்த பலூன் வானத்தில் திடீரென கட்டுபாட்டை இழந்தது.

பொள்ளாச்சி பலூன் திருவிழா

பிறகு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கன்னிமாரி பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் தரையிறங்கியது. அதில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக தரையிறங்கினர்.

பிறகு மாற்று  ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் பொள்ளாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலூன் திருவிழாவில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று புகார் எழுந்தது.

பொள்ளாச்சி பலூன் திருவிழா விபத்து

“எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தான் பலூன் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதேநேரத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன.” என்று பலூன் திருவிழா ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பஞ்சாப்: விபத்தா? தற்கொலையா? - துப்பாக்கியைத் துடைக்கும்போது உயிரிழந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குர்பிரீத் கோகி. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குர்பிரீத் நேற்று 11 மணியளவில் தனது வீட்டில் தனது துப்பாக்கியை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தார். அந்நே... மேலும் பார்க்க

Tirupati stampede: `இந்தத் துயரச் சம்பவம்...' - திருப்பதி நெரிசல் குறித்து ஆந்திர முதல்வரின் பதிவு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10-ம் தேதி முதல் 19-ம் தேதிவரை சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 10 நாள்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் ... மேலும் பார்க்க

Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சுத் திணறி 6 பேர் பலி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி `சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை... அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த ... மேலும் பார்க்க

கீழே விழுந்த பயணியை மீட்கப் பின்னோக்கி ஓடிய ரயில்; சக பயணிகளின் போராட்டத்தையும் மீறி நடந்த சோகம்

மும்பையில் ஒவ்வொரு நாளும் புறநகர் ரயிலிலிருந்து கீழே விழுந்து 5க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து புனே நோக்கி தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந... மேலும் பார்க்க

நல்லபாம்பு கடித்து மரணமடைந்த பாம்புபிடி வீரர்; ``குடும்பத்துக்கு அரசு உதவி..'' -மக்கள் கோரிக்கை!

கேரள மாநிலத்தில் பாம்புபிடி வீரர்கள் அதிகமாக உள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக பாம்புபிடி வீரர்களை தொடர்புகொண்டு உதவி கேட்கின்றனர். பாம்புபிடி வீரர்கள் பாம்பை பிடித... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 6 தொழிலாளர்கள் பலி

வச்சக்காரப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.மீட்புப் பணி அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூரை அடுத்த பொம்மையாபுர... மேலும் பார்க்க