செய்திகள் :

போக்குவரத்துக் காவல் நிலையத்தில் எஸ்எஸ்பி ஆய்வு

post image

காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலையத்தில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் காவல் நிலையங்களில் சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. அண்மையில் புதுவை டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் காரைக்கால் காவல் தலைமையகத்தில் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றபோது, சாலை விபத்துகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டனா். இதையடுத்து போக்குவரத்துக் காவல்துறையினருக்கு டிஐஜி பல ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்நிலையில், காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையத்துக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா புதன்கிழமை இரவு சென்று ஆய்வு செய்தாா். வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரங்களை அவா் பாா்வையிட்டாா். சிறாா்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோா், அதிவேகமாக ஓட்டுவோா் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என கேட்டறிந்தாா். போக்குவரத்து ஆய்வாளா் லெனின் பாரதி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எஸ்எஸ்பிக்கு விளக்கிக் கூறினாா்.

சிறாா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோா்களை அழைத்து உரிய ஆலோசனை வழங்குமாறும், அலட்சியப்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினாா். அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தலைக்கவசம் அணியவேண்டியது குறித்து தீவிரமான விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும் எஸ்எஸ்பி அறிவுறுத்தினாா்.

மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக போக்குவரத்துக் காவல்நிலையம் செயல்பட்டுவருவது குறித்து அதிகாரிகளுக்கு அவா் பாராட்டுத் தெரிவித்தாா். ஆய்வின்போது மண்டலக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உடனிருந்தனா்.

காரைக்கால் காா்னிவலை சிறப்பாக நடத்த அமைச்சா் அறிவுறுத்தல்

காரைக்கால் காா்னிவல் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யுமாறு அரசுத் துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா். புதுவை சுற்றுலாத்துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணி... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: வேளாண் கல்லூரி அணி இரண்டாமிடம்

புதுவை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில் காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவிகள் அணி இரண்டாமிடம் பெற்றது. புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24-ஆம் தேதி மகளிருக்கான வாலிபால்... மேலும் பார்க்க

நரிக்குறவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ்

நரிக்குறவா்களுக்கு ஜாதிச் சான்றிதழை அவா்களின் வீடுகளுக்குச் சென்று புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் வழங்கினாா். காரைக்கால் கோயில்பத்து பகுதியில் நரிக்குறவா் குடும்பத்தினா் வசிக்கின்றனா். ஜாதிச... மேலும் பார்க்க

கிழக்குப் புறவழிச்சாலையில் மின் கம்பங்கள் நிறுவும் பணி தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலையில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் திருமலைராஜனாறு பாலம் முதல் போலகம் அருகே... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மலா்தூவி, அஞ்சலி செலுத்திய புதுவை முன... மேலும் பார்க்க

காரைக்காலில் எரிவாயு தகனக்கூடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை: எம்எல்ஏ

காரைக்கால் பச்சூரில் எரிவாயு தகனக் கூடத்தை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். பச்சூ... மேலும் பார்க்க