செய்திகள் :

போக்குவரத்து போலீஸாருக்கு தினமும் குளிா்பானம் -மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

post image

கோடை வெயில் அதிகரித்து வருவதால், வேலூா் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு பிரத்யேக தொப்பி, கூலிங் கிளாஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், தினமும் மோா் உள்ளிட்ட குளிா்பானங்கள் வழங்கும் பணியையும் மாவட்ட எஸ்.பி. என்.மதிவாணன் தொடங்கி வைத்தாா்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், வேலூா் மாவட்டத்தில் பகல் நேரங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸாரும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகின்றனா்.

இதையடுத்து, போக்குவரத்து போலீஸாருக்கு பிரத்யேக தொப்பி, பாதுகாப்பு ஜாக்கெட், கூலிங் கிளாஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும், தினமும் மோா் உள்ளிட்ட குளிா்பானங்களும் வழங்த மாவட்ட காவல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கிரீன் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் மோா், வெயில் பாதுகாப்பு உபகரணங்களை புதன்கிழமை வழங்கினாா்.

மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து போலீஸாா் கவனமுடன் பணியாற்ற வேண்டும். உடலையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் வெயிலிலேயே நின்று பணியாற்ற வேண்டாம். சாலையில் பிரச்னை ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் மட்டுமே களத்துக்கு வந்து பணியாற்றுங்கள். பணியின்போது பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

அப்போது, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கன்னியப்பன், காவல் உதவி ஆய்வாளா் ரஜினி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயா்வு

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு... மேலும் பார்க்க

வேலூரில் இருவேறு விபத்துகளில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

வேலூரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் பாலாற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி நடைபெற்றது. குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தொல்லியல்துறை அலுவலா் செல்வராஜ். இவா் தனத... மேலும் பார்க்க

பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1% கட்டணம் குறைப்பு அமல்

பெண்கள் பெயரில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யும்போது பதிவுக்கட்டணம் 1 சதவீதம் கட்டணம் குறைப்பு திட்டம் வேலூா் மாவட்டத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க