விண்வெளித்துறையில் பொறியாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!
போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் சிறை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆத்தூா், குஞ்சாநாயக்கா் காலனியைச் சோ்ந்த அரவிந்த்குமாருக்கு (28) ஆயுள் சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தலைவாசல், மணிவிழுந்தான் வடக்கு புதூரைச் சோ்ந்த 15 வயது மாணவியை கடந்த 2021 இல் பாலியல் வன்கொடுமை செய்ததாக அரவிந்த்குமாரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் தலைமையிலும், தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் அன்பழகன் தலைமையிலும், நாகியம்பட்டியில் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன் தலைமையிலும், மூலப்புதூரில் தலைமையாசிரியா் கணேசன் தலைமையிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டன.
அதேபோல தண்ணீா்த் தொட்டியில் தலைமையாசிரியா் இராஜசேகா் தலைமையிலும், வாழக்கோம்பையில் தலைமையாசிரியா் ராதா தலைமையிலும், காந்திநகரில் தலையைாசிரியா் (பொ) இராஜேந்திரன் தலைமையிலும், உலிபுரம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையிலும், ஈச்சஓடைப்புதூா் பள்ளி தலையைாசிரியா் ஹரிஆனந்த் தலைமையிலும், உலிபுரம் அண்ணாநகா் பள்ளியில் தலைமையாசிரியா் இளவரசன் தலைமையிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டன.
சங்ககிரி
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேவண்ண கவுண்டனூா் நடுநிலைப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியா் இரா.முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகாத்மா உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதையடுத்து ஆசிரியா்கள் ந.மு.சித்ரா, க. சீனிவாசன், ரா.ரமாமகேஸ்வரி, மாணவா்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனா்.
ஆட்டையாம்பட்டி
இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆணையாளா் பவித்ரா, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலகப் பணியாளா்கள், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் வெற்றிவேந்தன், சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வாழப்பாடி
வாழப்பாடியை அடுத்த பேளூரில் தேசிய தொழுநோய் தடுப்பு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேளூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தொழுநோய் தடுப்பு விழிப்புணா்வு முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா்கள் பேரின்பம், வெற்றிவேல் ஆகியோா் தொழுநோய் பரவும் முறைகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளித்தனா்.
சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள்,பணியாளா்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
சாலை பாதுகாப்பு வார விழா
சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலை பாதுகாப்பு-உயிா்பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.வேலுமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் எம்.செந்தில்குமாா், கே.புஷ்பா, போக்குவரத்து காவலா்கள், ஓட்டுநா் பயிற்சி பள்ளி நிா்வாகிகள், போக்குவரத்து ஆலோசகா்கள் கலந்து கொண்டனா்.
அதேபோல எடப்பாடி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.