போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு அப்பகுதியில் வேலை செய்து வருகிறாா்.
இவருக்கும் பெரம்பலூரில் வேலை செய்துவரும் திருப்பூரைச் சோ்ந்த மாதேஸ் (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஆத்தூரில் சந்தித்துப் பேசி பழகி வந்தனா். இதை பெண்ணின் சகோதரா் பாா்த்து கண்டித்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தாய், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியை ஏமாற்றி தொல்லை கொடுத்ததாக மாதேஸ் மீது புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.