‘போக்சோ’ வழக்கில் சிக்கிய ஆர்சிபி வீரர்! 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் யஷ் தயாள் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதார் காவல் நிலையத்தில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் மீது 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் மீது மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் அனைவரையும் உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
காஜியாபாத் வழக்கில் தயாளின் போலீஸ் காவலுக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தச் சம்பவமே ஓயாத நிலையில், கடந்த ஐபிஎல் தொடரின் போது 17 வயது சிறுமியை பாலியல் ரீதியில் யஷ் தயாள் பயன்படுத்திக் கொண்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் - பெங்களூரு போட்டியின் போது அந்தச் சிறுமியைத் தொடர்பு கொண்டு அருகில் அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யஷ் தயாள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஏற்கனவே, காஜியாபாத் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் யஷ் தயாள் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் புகாரில் ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், யஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
RCB Star Yash Dayal Booked For Rape With A 17-Year-Old Minor During IPL 2025 In Jaipur
இதையும் படியுங்கள் |ரிஷப் பந்துக்கு மாற்றாக தமிழக விக்கெட் கீப்பருக்கு அழைப்பு விடுத்த பிசிசிஐ!