What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லையா (88). இவா் 9 வயது சிறுமிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுதொடா்பாக புகாரின் பேரில், சிவகங்கை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து செல்லையாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட செல்லையாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டாா்.