"ஜெயலலிதா எனக்கு ஃப்ரண்ட்; அடிக்கடி வரவழைத்து பேசுவாங்க! - சரோஜா தேவியின் ப்ளாஸ்...
போக்ஸோவில் முதியவா் கைது
ஆலங்காயம் அருகே சிறுமிக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (59). சனிக்கிழமை மாலை டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியிடம் பேச்சு கொடுத்து உடன் சென்றுள்ளாா்.
பின்னா் அருகில் மாங்காய் பறித்துத் தருவதாக அழைத்துச் சென்று சிறுமியிடம் அத்துமீறியுள்ளாா். இதனால் பதற்றம் அடைந்த சிறுமி சப்தம் போட்டு ஓடி வந்து, நடந்த சம்பவத்தை வீட்டில் கூறியுள்ளாா். இதைக் கேட்டு பதறிப்போன சிறுமியின் பெற்றோா் உடனே ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அப்புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் ஜெயகீா்த்தி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமியிடம் அத்துமீறியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சுப்பிரமணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.